உணவு, உடை, உறைவிடம் இம்மூன்றும் உலகில் பிறந்த அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாகும். இம்மூன்றும் பெற்றவர்கள் உலகில் நலமுடன் வாழ்வர். இவர்கள் எல்லோருமே தங்களுக்காகப் பலவித பொருட்களைப் பிறரிடமிருந்து வாங்குகிறார்கள்.
இப்படி வாங்கி அனுபவிப்போர் "நுகர்வோர்' (ஸ்ரீர்ய்ள்ன்ம்ங்ழ்) என அழைக்கப்படுகிறார்கள்.
நுகர்வோர் வாங்கும் பொருட்கள் -
* தரமானதாகவும்
* சரியான எடையுடனும்
* நியாயமான விலையிலும்
கிடைக்க வேண்டும். பொருட்கள், இந்த மூன்றின் செயல்பாட்டு வழியாக நுகர்வோரைச் சென்றடைகிறதா என்பதைக் கவனிக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த 'ரால்ப் நடார்' என்பவர் நுகர்வோர் நலனைக் கருத்தில் கொண்டு ஓர் அமைப்பைத் தோற்றுவித்தார். அவர் தோற்றுவித்த இந்த அமைப்புதான் உலகின் பல பகுதிகளுக்கும் முன்னோடியாக அமைந்தது எனலாம். இதன் அடிப்படையில்தான் இந்தியாவிலும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தோன்றியது.
பொருட்களை வாங்கும்போது நுகர்வோருக்கு ஏற்படும் குறைகளைக் களையவும் அவர்கள் ஏமாற்றம் அடைவதைத் தடுக்கவும் அதனால் ஏற்படும் இழப்பினைச் சரி செய்யவும் 1926-ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் ஒன்று இயற்றப்பட்டது.
குறைபாடுள்ள பொருட்களைத் தடை செய்யவும் இச்சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. மேலும் பொருட்களில் கலப்படம் செய்து விற்பனை செய்பவர்களையும் அதேபோல உற்பத்தி நிலையிலேயே தரக்குறைவாகத் தயாரிக்கும் உற்பத்தியாளர்களையும் தவறு செய்யாமல் தடுப்பதற்கு இந்தச் சட்டத்தில் வழி வகைகள் உள்ளன.
இதற்கு முன்னரே, 1958-ஆம் ஆண்டு நுகர்வோர் நலனைக் கருத்தில் கொண்டு எடை அளவுச் சட்டம் இயற்றப்பட்டது. இதன் மூலம் எடைக் கற்கள் அரசினால் முத்திரை இடப்படுகின்றன. ஆண்டுக்கு ஒருமுறை அரசின் எடை மற்றும் அளவுத் துறையை அணுகி எடைக் கற்களைக் காண்பித்து, அரசின் முத்திரையைப் பெற வேண்டும். நுகர்வோருக்கு விற்கப்படும் பொருட்கள் எடை குறைவாக இருந்தாலும் எடைக் கற்கள் சரியான முத்திரையில்லாமல் இருந்தாலும் விற்போருக்கு இந்தச் சட்டத்தின் மூலம் தண்டனை வாங்கித் தரமுடியும்.
பொட்டலம் (பாக்கெட்) போன்ற அமைப்பில் உள்ள பொருட்களாக இருந்தால் உறையின்மேல்-
* பொருளின் பெயர்
* பொருளின் அளவு
* விலை விவரம்
* தயாரிப்பு தேதி
* உற்பத்தியாளர் பெயர் மற்றும் முகவரி
ஆகிய விவரங்கள் அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதே போன்று மருத்துவப் பொருட்களில் கூடுதலாக எந்தக் காலம் வரை அந்த மருந்தைப் பயன்படுத்தலாம் என்ற விவரமும் இருக்க வேண்டும்.
நமது நாட்டில் நுகர்வோர் நலனுக்காக செயல்படும் நுகர்வோர் நீதிமன்றங்கள் ஐந்நூறுக்கும் மேற்பட்டவை இருக்கின்றன.
நுகர்வோர் நலன் கருதி தொடுக்கப்படும் வழக்கைக் குறுகிய காலத்தில் அதாவது மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற ஒரு நியதியும் உண்டு. இந்த நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பானது -
* குறைகளைத் தீர்த்தல்
* பொருட்களை மாற்றிக் கொடுத்தல்
* அல்லது தொகையினை திருப்பித் தருதல்
* நஷ்ட ஈடு வழங்குதல்
* சிறைத்தண்டனை
என்று ஏதாவது ஒன்று இவற்றில் அடங்கும்.
நுகர்வோர் பொருட்களை வாங்கும்போது ஐ.எஸ்.ஐ. ( ISI) முத்திரை இருக்கிறதா எனப் பார்த்து வாங்க வேண்டும். பொருட்கள் வாங்கும்போது அவற்றின் எடை சரியாக உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும். அவற்றுக்கான விற்பனைப் பட்டியலையும் கேட்டு வாங்கவேண்டும்.
ஒரு பொருளுக்கு உத்திரவாதம் இருக்கும்பட்சத்தில், பொருளில் குறைபாடுகள் இருந்தால் குறிப்பிட்ட காலத்துக்குள் அதை மாற்றித் தர வேண்டும். தவறினால் நுகர்வோர், நுகர்வோர் நல நீதிமன்றங்களின் உதவியை நாடலாம்.
இன்றைய காலகட்டம் ஓர் விளம்பர யுகம். ஒரு பொருள் வாங்கினால் மற்றொரு பொருள் இலவசம் என்று விளம்பரம் செய்யப்படுகின்றது. இவ்வாறு விளம்பரம் செய்யப்படும் பொருட்கள் தரமானவைகள்தானா என்று ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து வாங்குங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெண் கொலை: இளைஞா் கைது

இந்தியாவின் லட்சியங்களுக்கு எல்லையில்லை! நெதா்லாந்தில் பிரதமா் மோடி பெருமிதம்
திரைக் கதிர்
26 ஆண்டுகள் நிறைவு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

